கோவில்பட்டியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 22 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 22 போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 22 ஆண்டுகள் சிறை
Published on

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் மாடசாமி(எ) மகேஷ் (வயது 29) என்பவரை கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா நேற்று முன்தினம், குற்றவாளி மாடசாமி(எ) மகேஷ் என்பவருக்கு 22 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.12 ஆயிரம் அபராதமும் மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரேமா, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலட்சுமி, விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் அமிர்தஜோதி ஆகியோரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார். இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 22 போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com