பீடி வாங்க 10 ரூபாய் தராததால் நண்பரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

பீடி வாங்க 10 ரூபாய் கேட்டு, டிஜேஸ்வரனின் சட்டைபையில் முஜிபுர் ரகுமான் கையை விட்டுள்ளார்.
பீடி வாங்க 10 ரூபாய் தராததால் நண்பரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
Published on

கோவை,

நீலகிரி மாவட்டம் குன்னூர், காட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் டிஜேஸ்வரன் (வயது 29). இவர் மீது கோவை மாவட் டத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் இருந்தன. அடிக்கடி சிறைக்கு சென்று வந்தார். ஜாமீனில் விடுதலையான டிஜேஸ்வரன், நண்பரான கோவை ஈச்சனாரியை சேர்ந்த முஜிபுர் ரகுமான் (22) மற்றும் சிலருடன் சேர்ந்து அடிக்கடி மதுகுடிக்க செல்வது வழக்கம்.

இந்தநிலையில் 20.2.2019 அன்று மதுக்கடையில் மதுகுடித்துவிட்டு வந்துள் ளனர். மதுக்கரை ரோடு மேம்பாலம் அருகில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது டிஜேஸ்வரனிடம், முஜிபுர் ரகுமான் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அவர் கொடுக்கவில்லை. பின்னர் பீடி வாங்க 10 ரூபாய் கேட்டு, டிஜேஸ்வரனின் சட்டைபையில் முஜிபுர் ரகுமான் கையை விட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முஜிபுர் ரகுமானை டிஜேஸ்வ ரன் பிடித்து கீழே தள்ளியுள்ளார்.

இதில் முஜிபுர் ரகுமானின் தலையில் காயம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அவர் டிஜேஸ்வரனை கொல்லா மல் விடமாட்டேன் என்று எச்சரித்து சென்றுள்ளார். அன்று பகல் 3 மணியளவில் போத்தனூர் மூணுகண் பாலம் அருகில் டிஜேஸ்வரன் நண்பர்களுடன் சென்றபோது, அங்கு நின்று கொண்டு இருந்த முஜிபுர் ரகுமான், தன்னை தாக்கியது குறித்து தகராறு செய்துள்ளார்.

பின்னர் கல்லை எடுத்து டிஜேஸ்வரனின் தலை மற்றும் முகத்தில் சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுந்தராபுரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து முஜிபுர் ரகுமானை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை 5-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத் தில் நடந்து வந்தது. வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி சிவக்குமார், குற்றம்சாட்டப்பட்ட முஜிபுர் ரகுமானுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அரசு தரப்பில் வக்கீல் மோகன் பிரபு ஆஜராகி வாதாடினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com