தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
Published on

மயிலாடுதுறை அருகே கங்கணம்புத்தூர் சின்னத்தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது38). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது மனைவி சரிதாவிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அதற்கு சரிதா மகளிர் குழுவிற்கு கட்டுவதற்காக பணம் வைத்துள்ளேன். அதனை தரமுடியாது என்று கூறி மறுத்துள்ளார். இதனால் ராஜா தனது மனைவி சரிதாவை திட்டி உள்ளார். இதையடுத்து அவரிடம் கோபித்துக்கொண்டு அருகில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சரிதா சென்றுள்ளார். இதில் மனவேதனை அடைந்த ராஜா வீட்டிலேயே தூக்குப்போட்டு கொண்டார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சரிதா கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com