விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
Published on

கபிஸ்தலம் அருகே உள்ள புளியம்பாடி கிராமத்தில் வசிப்பவர் குணசேகரன் மகன் சுரேஷ் (வயது32). விவசாய கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சித்ரா (20). இவர்களுக்கு பிறந்து 35 நாட்களே ஆன ஆண் குழந்தை உள்ளது. சுரேசுக்கு நீண்ட நாட்ளகாக வயிற்று வலி இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த அவர் சம்பவத்தன்று வயலுக்கு அடிக்க வைத்திருந்த விஷப்பூச்சி மருந்தை குடித்துவிட்டார். இதில் மயங்கி விழுந்து கிடந்த அவரை வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சுரேஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சித்ரா கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com