மூக்குத்திக்காக மூதாட்டியை கொன்றவருக்கு ஆயுள்தண்டனை

மூக்குத்திக்காக மூதாட்டியை கொன்றவருக்கு ஆயுள்தண்டனை வழங்கி சென்னை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது .
மூக்குத்திக்காக மூதாட்டியை கொன்றவருக்கு ஆயுள்தண்டனை
Published on

சென்னை, 

சென்னை திருவல்லிக்கேணி ரோட்டரிநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிலட்சுமி (வயது 72). கடந்த 3.3.2021 அன்று இரவு தனியாக இருந்த இவரது வீட்டுக்குள் வசந்தகுமார் என்ற மினி பாஷா (23) என்பவர் அத்துமீறி நுழைந்து ஆதிலட்சுமியை தாக்கி உள்ளார். இதில் ஆதிலட்சுமி உயிரிழந்தார். இதன்பின்பு அவர் அணிந்திருந்த மூக்குத்தி மற்றும் ரூ.2 ஆயிரம் பணத்தை வசந்தகுமார் கொள்ளையடித்து சென்றார்.

இதுகுறித்து ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்தகுமாரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிர் கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த கோர்ட்டு, வசந்தகுமார் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறி அவருக்கு ஆயுள்தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com