ஆட்டோவில் ஆடு திருடியவர் கைது

ஆட்டோவில் ஆடு திருடியவர் கைது செய்யப்பட்டார்.
ஆட்டோவில் ஆடு திருடியவர் கைது
Published on

ராமநாதபுரம் அருகே புத்தேந்தலை சேர்ந்தவர் பால்சாமி(வயது 48). இவரும், மங்கை என்பவரும் தங்களுக்கு சொந்தமான ஆடுகளை புத்தேந்தல் பகுதியில் மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது ஆட்டோவில் வந்த ஒருவர் 2 ஆடுகளை திருடி சென்றார். இதுகுறித்து பால்சாமி கொடுத்த புகாரின்பேரில் ராமநாதபுரம் நகர் போலீசார் ஆட்டோ நம்பரை வைத்து விசாரித்து புல்லங்குடியை சேர்ந்த பாஸ்கரனை(வயது 37) கைது செய்தனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com