பள்ளி நேரத்தில் மாணவர்களின் பாதுகாப்பிற்கு நிர்வாகமே பொறுப்பு - தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு

கல்வித்துறை சார்பில், அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது
பள்ளி நேரத்தில் மாணவர்களின் பாதுகாப்பிற்கு நிர்வாகமே பொறுப்பு - தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு
Published on

சென்னை,

கேவையில் சில தனியார் பள்ளிகள், பெற்றேரிடம் உறுதி மெழி படிவம் பெற்றதாக புகார் எழுந்தது. மாணவர்களின் பாதுகாப்பு விஷயத்தில் பள்ளி நிர்வாகம் படிவம் பெற்ற விவகாரம் சமூக வலைதளத்தில் பரவி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்நிலையில், கல்வித்துறை சார்பில், அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், பள்ளி நேரத்தில், வளாகத்திற்குள் உள்ள மாணவர்களின் பாதுகாப்பிற்கு பள்ளி நிர்வாகமே, முழு பொறுப்பு ஏற்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் நடந்து கெண்ட விதம், விசாரணையில் உறுதியாகும் பட்சத்தில், சட்டப்பூர்வ நடவ டிக்கை எடுக்கப்படும் என்றும், பெற்றோர் தயங்காமல், புகார் அளிக்கலாம் என்றும் முதன்மை கல்வி அலுவலர் பூபதி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com