முதல் நிலை பேரிடர் மீட்பாளர்களுக்கு மேலாண்மை பயிற்சி

கடலூர் தாலுகா அலுவலகத்தில் குறுவட்ட அளவிலான முதல் நிலை பேரிடர் மீட்பாளர்களுக்கு மேலாண்மை பயிற்சி நடந்தது.
முதல் நிலை பேரிடர் மீட்பாளர்களுக்கு மேலாண்மை பயிற்சி
Published on

கடலூர்,

கடலூர் தாலுகா அலுவலகத்தில் குறுவட்ட அளவிலான முதல் நிலை பேரிடர் மீட்பாளர்களுக்கு மேலாண்மை பயிற்சி நடந்தது. இதில் மாநில அளவிலான முதன்மை பயிற்சியாளர்கள் விநாயகமூர்த்தி, விமல் ஆகியோர் கலந்து கொண்டு, பேரிடர் காலங்களில் எவ்வாறு மீட்பு பணியில் ஈடுபடுவது, மனிதர்களை மட்டுமின்றி கால்நடைகளையும் எவ்வாறு மீட்டு கொண்டு வருவது, பேரிடர் தாக்கிய பிறகு பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு மீட்பது, அவர்களுக்கு உதவி செய்வது, காயமடைந்தவர்களுக்கு எப்படி கட்டு போட்டு, பாதுகாப்புடன் முதலுதவி அளிப்பது, பொதுமக்களிடம் தவறான தகவலை பரப்பாமல் சரியான தகவலை கொண்டு சேர்ப்பது போன்ற பல்வேறு பயிற்சி அளித்தனர். இதில் 25-க்கும் மேற்பட்ட முதல் நிலை பேரிடர் மீட்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com