பசுமையை நோக்கி மணலி: 450 மரக்கன்றுகள் நடப்பட்டன

மரக்கன்றுகள் நடும் பணிகளுக்காக மரக்கன்றுகள் வளர்க்கும் நாற்றங்கால் பண்ணைகள் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது.
பசுமையை நோக்கி மணலி: 450 மரக்கன்றுகள் நடப்பட்டன
துணை ஆணையாளர் ஸ்வேதா சுமன்
Published on: 

சென்னை,

மணலி மண்டலத்தில் பசுமைப் பரப்பினை அதிகரிக்கும் வகையில் 450 மரக்கன்றுகள் இன்று நடப்பட்டது. இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது;-

12 லட்சம் மரக்கன்றுகள்

சென்னை மாநகராட்சியில் 12 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 15 மண்டலங்களிலும் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. சாலை ஓரங்கள், சாலை மையங்கள், மயானபூமிகள், பூங்காக்கள், மக்கள் குடியிருப்பு பகுதிகள், குளங்கள், ஏரிகள், ஆறுகள் மற்றும் கால்வாய்க் கரைகள் உள்ளிட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.

மரக்கன்றுகள் நடும் பணி

மேலும், மரக்கன்றுகள் நடுவதற்கு தன்னார்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு நலச்சங்கள் ஆகியோர் ஊக்குவிக்கப்பட்டு, மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

மரக்கன்றுகள் கொள்முதல்

மரக்கன்றுகள் நடும் பணிகளுக்காக மரக்கன்றுகள் வளர்க்கும் நாற்றங்கால் பண்ணைகள் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. மேலும், தனியாரிடமிருந்தும், வனத்துறையிடமிருந்தும் மரக்கன்றுகள் கொள்முதல் செய்தும் நடும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

மணலி மண்டலம்

மரக்கன்றுகள் நடும் பணிகளின் ஒரு பகுதியாக, இன்று வடக்கு வட்டாரம், மணலி மண்டலத்தில் பியூச்சுரா பிரதான சாலை, பியூச்சுரா லேஅவுட், மணலி புதுநகர் 5ஆவது பிளாக்கில் உள்ள பூங்கா, கடப்பாக்கம் ஏரி, மற்றும் இடையஞ்சாவடி மயானபூமி ஆகிய பகுதிகளில் 450 மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

துணை ஆணையாளர்

இதில் வடக்கு வட்டார துணை ஆணையாளர் ஸ்வேதா சுமன், வார்டு-22க்குட்பட்ட பியூச்சுரா பிரதான சாலை மற்றும் பியூச்சுரா லேஅவுட் பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு, இப்பணிகளை பார்வையிட்டார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X