மஞ்சளாறு அணையின் கரை சீரமைப்பு பணி

மஞ்சளாறு அணையின் கரை சீரமைப்பு பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
மஞ்சளார் அணை (Image Credits : விக்கிபீடியா)
மஞ்சளார் அணை (Image Credits : விக்கிபீடியா)
Published on

தேவதானப்பட்டி மஞ்சளாறு அணையின் கரையை பலப்படுத்தும் வகையில், தமிழகத்திலேயே முதல்முறையாக ரூ.2 கோடி மதிப்பில் தென்னை நார் மூலம் கயிறு வலையால் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுடன், தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு குளத்தை தேர்வு செய்து, சோதனை முயற்சியாக கயிறு வலையை பயன்படுத்தி, அதன் செயல்பாடுகளை ஆராயுமாறு வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மதுமதி, செயற்பொறியாளர் முருகன், மஞ்சளாறு அணை செயற்பொறியாளர் சுகுமார், உதவி செயற்பொறியாளர் சவுந்தரம், உதவி பொறியாளர் தளபதி ராம்குமார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com