அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு பெற்றது.
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு
Published on

புன்னம்சத்திரம் அருகே கரியாம்பட்டியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து 48 நாள் மண்டலாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து மண்டலாபிஷேக நிறைவு நாளையொட்டி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனிதநீரை எடுத்து கொண்டு தாரைதப்பட்டை முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.தொடர்ந்து அம்மனுக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com