வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும்

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும்
Published on

கும்பகோணம்:

அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் கடந்த மாதம் மரணமடைந்தார். இதனை தொடர்ந்து வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கும்பகோணத்தில் நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு வேளாண்மை இணை இயக்குனர் பழனியப்பன் தலைமை தாங்கினார். விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் முன்னிலை வகித்தார். விஞ்ஞானி சுவாமிநாதன் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து இயற்கை உரங்கள் தொடர்பான கருத்தரங்கம் நடந்தது.

பேட்டி

பின்னர், விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- வேளாண் விஞ்ஞானி எம்,எஸ்.சுவாமிநாதன் மறைவுக்குப் பிறகு தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வேளாண் கல்லூரிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் நினைவு வேளாண் கல்லூரி என தமிழக அரசு பெயர் சூட்டி இருப்பது வரவேற்கத்தக்கது.

தொடர்ந்து வேளாண் ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் கும்பகோணம் பகுதியில் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு மணிமண்டபம் அமைத்து அதில் அவருடைய ஆராய்ச்சிகள் குறித்த தகவல்கள் காட்சி படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் காவிரி டெல்டா பாதுகாப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் சுந்தர.விமலநாதன், வேளாண்மை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் கே.ராமசாமி, வேளாண் விஞ்ஞானி சித்தர், வேளாண்மை கல்லூரி முன்னாள் முதல்வர் பி.பாண்டியராஜன், காவிரி டெல்டா விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்புப் பொதுச் செயலாளர் ஆறுபாதி கல்யாணம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com