திருவானைக்காவலில் மாங்கனி திருவிழா

திருவானைக்காவலில் மாங்கனி திருவிழா நடைபெற்றது.
திருவானைக்காவலில் மாங்கனி திருவிழா
Published on

திருச்சி,

63 நாயன்மார்களில் புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையாரும் ஒருவர் ஆவார். இவரது திருநட்சத்திரத்தையொட்டி அருள்நெறி மன்றம் சார்பில் காரைக்கால் அம்மையாரின் மாங்கனி திருவிழா திருவானைக்காவல் மேல வீதி பிரகாரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. முன்னதாக திருக்கைலாய ஸ்ரீ கந்த பரம்பரை சூரியனார் கோவில் ஆதீன ஸ்ரீ கார்யம் வாமதேவ ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகளின் அருளாசி உரை நடைபெற்றது.

அதனை தொடர்ந்து காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. பின்னர் காரைக்கால் அம்மையார் சப்பரத்தில் எழுந்தருளி கைலாய வாத்தியங்கள் முழங்க திருநீற்றான் மதில் சுற்றான ஐந்தாம் பிரகாரத்தை சுற்றி வலம் வந்தார். அப்போது பக்தர்கள் மாம்பழங்களால் அர்ச்சனை செய்து வழிபட்டனர். வீதி உலாவில் ஏராளமான சிவ பக்தர்கள் கலந்து கொண்டு திருவாசகம் பாடியபடி சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com