மரங்களில் பூத்து குலுங்கும் மா பூக்கள்

வேப்பனப்பள்ளி பகுதிகளில் மா மரங்களில் பூக்கள் பூத்து குலுங்குவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மரங்களில் பூத்து குலுங்கும் மா பூக்கள்
Published on

வேப்பனப்பள்ளி

வேப்பனப்பள்ளி, நாச்சிகுப்பம், தீர்த்தம், சிங்கிரிப்பள்ளி, நெடுசாலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் மா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் இருந்து ஆண்டுதோறும் பெங்களூரா, நீலம், செந்தூரா, மல்கோவா, பீத்தர், ருமானி, பாங்கனபள்ளி கலாப்பாடு உள்ளிட்ட மாங்கனிகள் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து தமிழகத்திற்கு பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கும் டன் கணக்கில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பருவமழை பெய்துள்ளதால் மரங்களில் மா பூக்கள் பூத்து குலுங்குகிறது. இன்னும் 3 மாதங்களில் அனைத்து மாமரங்களிலும் மாங்காய்கள் காய்த்து அறுவடைக்கு தயாராக வரும். தற்போது மா பூக்கள் பூத்து மகசூல் அமோகமாக இருப்பதால் இந்த ஆண்டு மாங்காய் விலை அதிகரிக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மரங்களுக்கு மருந்து தெளித்தல் மற்றும் மரங்களை சுத்தம் செய்யும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சாலை ஓரங்களில் உள்ள மா மரங்களில் மா பூக்கள் பூத்து குலுங்குவதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை மா பூக்கள் கவர்ந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com