கண்ணகிக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்

கூடலூரில் கண்ணகிக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று பா.ஜ.க.வினர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.
கண்ணகிக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்
Published on

பா.ஜ.க. இளைஞரணி முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் மோடிகார்த்திக் தலைமையில் நிர்வாகிகள் தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பொறுப்பு வகிக்கும் ரவிச்சந்திரனிடம் அவர்கள் ஒரு மனு கொடுத்தனர். அதில், 'மங்கலதேவி கண்ணகி கோவிலுக்கு தமிழகம் வழியாக செல்வதற்கு சாலை அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். கூடலூரில் கண்ணகிக்கு சிலையும், மணிமண்டபமும் அமைக்க வேண்டும். சித்ரா பவுர்ணமி திருவிழாவை அரசே ஏற்று நடத்த வேண்டும்' என்று கூறியிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com