காமராஜர் இல்லத்தில் மரியாதை செலுத்திவிட்டு தேர்தல் பணிகளை தொடங்கிய மாணிக்கம் தாகூர்

தேர்தலுக்கு முன்னால் காமராஜர் இல்லத்திற்கு சென்று மரியாதை செலுத்துவது வழக்கம் என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
காமராஜர் இல்லத்தில் மரியாதை செலுத்திவிட்டு தேர்தல் பணிகளை தொடங்கிய மாணிக்கம் தாகூர்
Published on

விருதுநகர்,

விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

இன்று விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த இல்லத்திற்கு சென்று அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு விருதுநகர் மாவட்ட கிழக்கு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிருஷ்ணமூர்த்தியோடும்,மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணசாமி, விருதுநகர் தொகுதி பொறுப்பாளர் சிவகுருநாதன் செயற்குழு உறுப்பினர் வெயில்முத்து வட்டார தலைவர்கள் சரவணன் முத்துமணி பாலமுருகன் பிச்சைக்கனி மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

எப்பொழுதுமே தேர்தலுக்கு முன்னால் காமராஜர் இல்லத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

2009, 2011, 2014, 2016, 2019, 2021, 2024 தற்போது 2026 தொடர்ச்சியாக இதனை வழக்கமாக கொண்டுள்ளேன்

'பெருந்தலைவர்'காமராஜர் காங்கிரஸின் உயிர் மூச்சு அவர்தான் காங்கிரஸின் பிம்பம் அவருடைய நேர்மையின் எளிமையும் காங்கிரஸ் கட்சிக்கு என்றும் துணை நிற்கும் என்ற நம்பிக்கையுள்ளவர் அவரது புகழ் பாடுவதில் பெருமையடைகிறோம்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறுவதற்காக என்னுடைய பணிகளை இன்று தொடங்குகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com