மணிகண்டம் ஒன்றியக்குழு கூட்டம்

மணிகண்டம் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.
மணிகண்டம் ஒன்றியக்குழு கூட்டம்
Published on

மணிகண்டம்:

மணிகண்டம் ஒன்றியக்குழு கூட்டம், ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் கமலம் கருப்பையா தலைமை தாங்கினார். துணை தலைவர் புவனேஸ்வரி சக்திவேல் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தகுமார் வரவேற்று பேசினார். தொடர்ந்து ஒன்றிய பொது செலவினங்கள் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து பேசினர். அப்போது நாச்சிகுறிச்சி ஊராட்சி கோனார்சத்திரத்தில் இருந்து இனியானூர் வரை உள்ள சாலை மற்றும் மேக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு பதில் அளித்து பேசிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர். கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா (கிராம ஊராட்சி), ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஒன்றிய பொறியாளர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com