மணிலா, எள் பயிர்களை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த பயிற்சி

பேரணாம்பட்டு ஒன்றியத்தில் மணிலா, எள் பயிர்களை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த பயிற்சி நடந்தது.
மணிலா, எள் பயிர்களை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த பயிற்சி
Published on

பேரணாம்பட்டு ஒன்றியம் டி.டி. மோட்டூர் ஊராட்சி செர்லபல்லி கிராமத்தில் வட்டார வேளாண்மை துறை சார்பில் கடந்த ஜனவரி 23ந் தேதி முதல் ஏப்-18 ந் தேதி வரையில் ஆத்மா திட்ட பண்ணைப் பள்ளி 6 நிலைகளாக விவசாயிகளுக்கு மணிலா, எள் பயிர்கள் குறித்து காலை நேர பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்த பயிற்சி வகுப்புகளுக்கு பேரணாம்பட்டு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் முனைவர் சுஜாதா தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட வேளாண்மை ஆராய்ச்சி நிலைய தலைவர் திருமுருகன், மேலாலத்தூர் கரும்பு ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் சரவணன், வேலூர் மாவட்ட உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு மணிலா, எள் பயிர்களின் சாகுபடியில் விதைப்பு முதல் அறுவடை வரையில் பயிர்களை தாக்கும் பூச்சிகள் மற்றும் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்து, விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதிலளித்தனர்.

கடைசி நாளில் மணிலா பயிர் மற்றும் எள் முதிர்ச்சி நிலை பருவ பூச்சிகள் கட்டுப்பாடு குறித்தும் பயிற்சியளிக்கப்பட்டது. பயிற்சியில் பங்கேற்ற 25 விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பிரசுரங்கள், உயிர் உரங்கள் மற்றும் பூச்சிகளை கண்டறிய தொப்பி, லென்ஸ், ஊசிகள் அடங்கிய பண்ணைப்பள்ளி பெட்டகங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தொழில்நுட்ப அலுவலர் திருமாவளவன், உதவி வேளாண்மை அலுவலர் மணிமேகலை ஆகியோர் செய்தி ருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com