திருப்பூர் குமரனுக்கு மணிமண்டபம் - அமைச்சர் சாமிநாதன்


திருப்பூர் குமரனுக்கு மணிமண்டபம்  - அமைச்சர் சாமிநாதன்
x
தினத்தந்தி 27 March 2025 10:40 AM IST (Updated: 27 March 2025 11:19 AM IST)
t-max-icont-min-icon

விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபையின் இன்றைய கேள்வி-பதில் நேரத்தின்போது சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார், ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிறந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிரை தியாகம் செய்த திருப்பூர் குமரனின் பிறந்த ஊரில் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு விழாவில் அறிவித்தார். அந்த மணிமண்டபம் அமைக்கும் பணி எந்த நிலையில் உள்ளது? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் சுவாமிநாதன்,

திருப்பூர் குமரன் பிறந்த ஊரான சென்னிமலையில் முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் தேர்வு செய்யப்பட்ட இடம் சென்னிமலையிலிருந்து தூரமாக இருந்தது. சென்னிமலை பகுதியில் வேண்டும் என பொதுமக்கள் கேட்டார்கள்.

எனவே அறநிலையத்துறை அமைச்சரிடத்தில் முதலமைச்சர் அதற்கான உத்தரவை பிறப்பித்து சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் வாடகை அடிப்படையில் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கப்படும். என தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story