காஞ்சீபுரத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மணிமேகலை விருது

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
காஞ்சீபுரத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மணிமேகலை விருது
Published on

இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 290 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள். தொடர்ந்து இந்த கூட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில், 2021-22 ஆண்டிற்கான மணிமேகலை விருது பெற்ற மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சான்றிதழ் மற்றும் விருது தொகையினை வழங்கினார்.

மேலும், ஆப்தமித்ரா திட்டத்தின்கீழ் பேரிடர் மேலாண்மை சார்பில், மீட்புக்குழு தன்னார்வலர்களுக்கு ஆபத்துகால மீட்புக்குழு உபகரணங்களையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, உதவி கலெக்டர் (பயிற்சி) அர்பித்ஜெயின், மகளிர் திட்ட இயக்குநர் கே.கவிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாபு, தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ரா.சுமதி, பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் தாண்டவமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com