'மன்மோகன் சிங் சிறந்த பொருளாதார நிபுணர்' - நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
'Manmohan Singh is a good man' - Actor Rajinikanth
Published on

சென்னை,

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (வயது 92), உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

இதனையடுத்து, டெல்லியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை விமானநிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், 'முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நல்ல மனிதர், சிறந்த பொருளாதார நிபுணர். அவரது மறைவுக்கு என் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார். மன்மோகன் சிங்கின் உடல் முழு அரசு மரியாதையுடன் நாளை தகனம் செய்யப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com