மாணவர்களை 'ஜெய் ஸ்ரீ ராம்' சொல்ல வைத்த விவகாரம் - கவர்னர் மீது மனோ தங்கராஜ் விமர்சனம்

கவர்னர் ஆர்.என்.ரவி அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கவில்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார்.
மாணவர்களை 'ஜெய் ஸ்ரீ ராம்' சொல்ல வைத்த விவகாரம் - கவர்னர் மீது மனோ தங்கராஜ் விமர்சனம்
Published on

சென்னை,

மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கெண்டு பேசிய கவர்னர் ஆர்.என். ரவி, அங்கிருந்த மாணவர்களை 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று 3 முறை சொல்ல வைத்தார். கவர்னரின் செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவி அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கவில்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"இந்திய அரசியலமைப்பு சட்டத்தினை கால் தூசு அளவிற்கு கூட கவர்னர் மதிக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ்-ன் Bunch of Thoughts எனும் நஞ்சை மனதில் சுமந்து நடக்கும் கவர்னர் எப்படி அரசியல் சட்டத்தை மதிப்பார்?

பல மத நம்பிக்கைகள் உடைய கல்லூரி மாணவர்கள் மத்தியில், அவர்களிடம் ஒரு குறிப்பிட்ட மதத்தை திணிக்கும் நோக்கில் தனது அதிகாரத்தை தவறாகக் கையாண்டிருக்கிறார். இப்பேர்பட்ட நஞ்சை சுமக்கும் நாகரீகமற்றவர்கள் எப்படி நடுநிலையுடன் மக்களுக்கு சேவை ஆற்ற முடியும். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பால் விரக்தியில் இருக்கம் கவர்னரே திரும்ப போ."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com