காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார் மன்சூர் அலிகான்

மத்திய அரசையும் தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து மன்சூர் அலிகான் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளார்.
காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார் மன்சூர் அலிகான்
Published on

சென்னை,

பீகாரைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு, கேரளா உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி வருகின்றது. முதல்கட்டமாக அனைத்து வாக்காளர்களுக்கும் படிவங்களை வழங்கிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பிஎல்ஓ), தற்போது பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வாக்காளர்களிடம் இருந்து பெற்று, இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிற மாநிலத்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை அளிக்கும் வகையில் எஸ்.ஐ.ஆர். பணிகளை மேற்கொள்ளும் தேர்தல் ஆணையத்துக்கு மன்சூர் அலிகான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னை எழும்பூரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார் நடிகர் மன்சூர் அலிகான். பிற மாநிலத்தவருக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை தரக்கூடாது என வலியுறுத்தி இந்திய ஜனநாயக புலிகள் கட்சித் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலைக்காக வந்த வேறு மாநிலத்தவருக்கு, தமிழ்நாட்டில் வாக்குரிமை கொடுக்க கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com