கட்சி பெயரை மாற்றிய மன்சூர் அலிகான்... நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு...?

மன்சூர் அலிகான் ஏற்கனவே ‘தமிழ் தேசிய புலிகள்' என்ற பெயரில் கட்சி தொடங்கி நடத்தி வந்தார்.
கட்சி பெயரை மாற்றிய மன்சூர் அலிகான்... நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு...?
Published on

சென்னை,

பிரபு நடித்த 'வேலை கிடைச்சிடிச்சு' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மன்சூர் அலிகான், 'கேப்டன் பிரபாகரன்' படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் 250 படங்களுக்கு மேல் நடித்ததுடன், பல படங்களை தயாரித்தும் இருக்கிறார்.

நடிகர் மன்சூர் அலிகான் ஏற்கனவே 'தமிழ் தேசிய புலிகள்' என்ற பெயரில் கட்சி தொடங்கி நடத்தி வந்தார். தற்போது அந்த கட்சியின் பெயரை 'இந்திய ஜனநாயக புலிகள்' என்று மாற்றி இருக்கிறார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவும் முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து மன்சூர் அலிகான் கூறும்போது, "தமிழ் தேசிய புலிகள் என்ற பெயரில் நான் ஏற்கனவே தொடங்கிய அமைப்பை தேசிய அளவில் எடுத்து செல்வதற்காக 'இந்திய ஜனநாயக புலிகள் இயக்கம்' என்று மாற்றி இருக்கிறேன். எளியவர்களை பதவியில் அமர்த்துவதும், ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துவதும், பெரியாரின் சித்தாந்தங்களை இந்தியா முழுவதும் பரப்புவதும்தான் எங்கள் கட்சியின் நோக்கம். அதற்காக தீவிரமாக பயணிக்க இருக்கிறோம்.

இதற்காக இந்தியா முழுவதும் கட்சிக்கு பொறுப்பாளர்களை நியமிக்க உள்ளோம். எங்களின் அரசியல் இனி தீவிரமாக இருக்கும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நேரடியாக போட்டியிடுவதா அல்லது வேறு எந்த கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதா என்பது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்வோம்' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com