நம்முடன் பல முன்னாள் அமைச்சர்கள் வரப்போகிறார்கள் - செங்கோட்டையன் பேச்சு

காலங்கள் கனிந்து வருகிறது. டிசம்பர் மாதத்திற்குள் நம்முடைய கூட்டணி வலிமையாக மாறும் என செங்கோட்டையன் கூறினார்.
நம்முடன் பல முன்னாள் அமைச்சர்கள் வரப்போகிறார்கள் - செங்கோட்டையன் பேச்சு
Published on

ஈரோடு,

தவெகவில் இணைந்த பின் சொந்த ஊரான கோபியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோபி செட்டிபாளையத்தில் தனது ஆதரவாளர்கள் மற்றும் தவெகவினர் மத்தியில் கே.ஏ. செங்கோட்டையன் பேசியதாவது:-

நான் பார்த்த முதல் தலைவர் எம்.ஜி.ஆர், 2-வது தலைவர் ஜெயலலிதா. தமிழ்நாட்டை ஆண்ட கட்சிகளே தமிழகத்தை ஆள வேண்டுமா? அல்லது புதிய தலைமுறையினர் ஆள வேண்டுமா? தமிழ்நாட்டை நாளை ஆளப்போகும் தலைவர் விஜய். விஜய் முதல்-அமைச்சராவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அதிமுக எங்குள்ளது என்ற நிலைக்கு ஆளாக்கிவிட்டனர். எந்த படம் சட்டையில் வைத்திருந்தாலும் என் தலைவர் ரசிப்பான். எல்லோரையும் அரவணைப்பவர் விஜய்.எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவுக்கு வழிகாட்டியாக இருந்ததைபோல் விஜய்க்கும் வழிகாட்டியாக இருப்பேன். காலங்கள் கனிந்து வருகிறது.டிசம்பர் மாதத்திற்குள் நம்முடைய கூட்டணி வலிமையாக மாறும் நம்மோடு இன்னும் பலமுன்னாள் அமைச்சர்கள் வருவார்கள். எடப்பாடி பழனிசாமி  ஒரு தேர்தல் வெற்றியாவது பெற்றிருக்கிறாரா?  என கேள்வி எழுப்பினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com