ஒரு விண்கலம் செலுத்தும் போது பல தொழில்கள் முன்னேற்றம் அடையும்இஸ்ரோ விஞ்ஞானி மோகனகுமார் பேச்சு

ஒரு விண்கலம் செலுத்தும் திட்டம் வெற்றி பெறும் போது அது சார்ந்த பல தொழில்கள் முன்னேற்றம் அடையும் என இஸ்ரோ விஞ்ஞானி எஸ்.மோகனகுமார் பேசினார்.
ஒரு விண்கலம் செலுத்தும் போது பல தொழில்கள் முன்னேற்றம் அடையும்இஸ்ரோ விஞ்ஞானி மோகனகுமார் பேச்சு
Published on

குலசேகரம், 

ஒரு விண்கலம் செலுத்தும் திட்டம் வெற்றி பெறும் போது அது சார்ந்த பல தொழில்கள் முன்னேற்றம் அடையும் என இஸ்ரோ விஞ்ஞானி எஸ்.மோகனகுமார் பேசினார்.

பாராட்டு விழா

இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக இறங்கியது. இந்த திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட எல்.வி.எம்.- 3 எம்.4 ன் ராக்கெட்டின் திட்ட இயக்குனர் எஸ்.மோகனகுமார். இவரது சொந்த ஊர் குமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள அரமன்னம் கிராம் ஆகும். இவருக்கு நேற்று சொந்த ஊரில் பாராட்டு விழா நடந்தது.

நிகழ்ச்சிக்கு மணிகண்டன் நாயர் தலைமை தாங்கினார். அய்யப்பன்நாயர், சுலோஜனா அம்மா ஆகியோர் வரவேற்று பேசினர். சசிதரன் நாயர், அப்புகுட்டன் நாயர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கோபிநாதன் நாயர் நினைவுப் பரிசு வழங்கினார்.

விழாவில் விஞ்ஞானி மோகனகுமார் பேசும் போது கூறியதாவது:-

சந்திரயான்- 3 திட்டம் வெற்றி பெற வேண்டுமென இந்தியர்கள் அனைவரும் வேண்டுதல் செய்தார்கள். அவர்களின் வேண்டுதல் படி இந்த திட்டம் வெற்றி பெற்றது.

புதிய நம்பிக்கை பிறக்கும்

ஒரு விண்கலம் செலுத்தும் திட்டம் வெற்றி பெறும் போது அது சார்ந்த பல துணைத் தொழில்களும், தொழிற்சாலைகளும் முன்னேற்றம் காணும். அதன் மூலம் ஒட்டுமொத்த சமூகமும் நன்மை அடையும். குறிப்பாக இளம் தலைமுறையினர் மத்தியில் புதிய நம்பிக்கை பிறக்கும்.

மாணவர்களுக்கு நான் சொல்வது கடின முயற்சியும், பெரியோர்களின் ஆசீர்வாதமும் இருந்தால் நல்ல நிலைக்கு செல்ல முடியும். பாடங்களைப் படிக்கும் போது தெளிவாக புரிந்து கொண்டு படிக்க வேண்டும்.

இஸ்ரோவிடம் அடுத்ததாக விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம் உள்ளது. அந்த திட்டத்திற்கும் எல்.வி.எம்.3 ராக்கெட் பயன்படுத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக விஞ்ஞானி மோகனகுமார் அவரது குடும்ப கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com