எம்.ஜி.ஆர். ஆட்சியைக் கொண்டு வருவதாகக் கூறிய பலர் முகவரி இல்லாமல் போய்விட்டனர் -அமைச்சர் ஜெயக்குமார்

எம்.ஜி.ஆர். ஆட்சியைக் கொண்டு வருவதாகக் கூறிய பலர் முகவரி இல்லாமல் போய்விட்டனர் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #TNPolitics #Jayakumar #RajinikanthPoliticalEntry
எம்.ஜி.ஆர். ஆட்சியைக் கொண்டு வருவதாகக் கூறிய பலர் முகவரி இல்லாமல் போய்விட்டனர் -அமைச்சர் ஜெயக்குமார்
Published on

சென்னை

அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரஜினிகாந்த் பேச்சில் அதிக முரண்பாடு உள்ளது. தமிழில் பேசினால் தமிழ் வளராது என அரிய கண்டுபிடிப்பை ரஜினி கண்டுபிடித்துள்ளார். மாணவர்களை, தமிழ் பேசச் சொல்லாமல் மம்மி, டாடி என்று ஆங்கிலம் பேசச் சொல்கிறார் ரஜினி.

அதிமுக பருந்து... ரஜினிகாந்த் குருவி எவ்வளவு உயர பறந்தாலும் பருந்து பருந்துதான்; குருவி குருவிதான். அதிமுக ஒரு உயர பறக்கும் பருந்து; அது ஊர் குருவியை கண்டு அஞ்சத்தேவையில்லை. வானத்திலிருந்து குதித்த அவதார புருஷர் போன்று பேசுகிறார் நடிகர் ரஜினிகாந்த் . எம்.ஜி.ஆர். ஆட்சியைக் கொண்டு வருவதாகக் கூறிய பலர் முகவரி இல்லாமல் போய்விட்டனர்.

24 மணிநேரமும் அதிமுக எப்போது கவிழும் என்று மு.க.ஸ்டாலின் சிந்தித்து வருகிறார் . இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com