அழகு மாரியம்மன் கோவில் குடமுழுக்கு

அழகு மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா நடந்தது.
அழகு மாரியம்மன் கோவில் குடமுழுக்கு
Published on

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம், வடகட்டளையில் அழகு மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்த கிராம மக்கள் தீர்மானித்தனர். அதன்படி கோவிலில் திருப்பணிகள் நடந்தன. இதன் முடிவில் குடமுழுக்கு விழாவுக்கான கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, பூர்ணாகுதி உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. பின்னர் யாக சாலை பூஜைகள் தொடங்கி நடந்து வந்தன. இதன் முடிவில் யாக சாலையில் இருந்து புனிதநீர் அடங்கிய கடங்கள் எடுத்து செல்லப்பட்டு கோவில் விமான கலசத்தில் ஊற்றப்பட்டது. தொடர்ந்து அழகு மாரியம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com