மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் தீப்பந்தம் ஏந்தி ஊர்வலம்

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பந்தக்காட்சி ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தீப்பந்தம் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் தீப்பந்தம் ஏந்தி ஊர்வலம்
Published on

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பந்தக்காட்சி ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தீப்பந்தம் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

மாரியம்மன் கோவில் திருவிழா

தர்மபுரி குமாரசாமிப்பேட்டையில் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 20-ந் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. பின்னர் யாகசாலை பூஜைகள், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. விழாவையொட்டி பக்தர்களுக்கு காப்பு கட்டுதலும், அக்கரைப்பட்டி முனியப்பன் கோவிலில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடும் நடைபெற்றன.

தொடர்ந்து இடும்பன் ஊர்வலம், சக்தி கரகம் அழைத்தல் நடைபெற்றது. பின்னர் மாரியம்மன், செல்லியம்மன் மற்றும் விருந்தாடி அம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சி, மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. விழாவின் இறுதி நிகழ்ச்சியாக நேற்று அதிகாலை தர்மபுரி ராஜகோபால் கவுண்டர் பூங்கா அருகில் இருந்து ரிஷப வாகனத்தில் மாரியம்மன் பந்தக்காட்சி ஊர்வலம் நடைபெற்றது.

பந்தக்காட்சி ஊர்வலம்

நகரின் முக்கிய விதிகள் வழியாக நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் தீப்பந்தங்கள் ஏந்தி பங்கேற்றனர். இந்த ஊர்வலம் குமாரசாமிப்பேட்டையை சென்றடைந்ததும் பக்தர்கள் வண்ண பொடிகளை தூவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவமும், கும்ப பூஜையும் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் செய்து இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com