மாரியம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா

அத்திமுட்லுவில் மாரியம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.
மாரியம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா
Published on

மாரண்டஅள்ளி:

மாரண்டஅள்ளி அருகே அத்திமுட்லு கிராமத்தில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடைபெற்றது. இதை தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்து வந்தது. இந்த மண்டல பூஜை நிறைவு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி கணபதி ஹோமம், தன பூஜை, நவகிரக ஹோமம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பொது மக்கள் பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். பின்னர் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com