மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

சிவகிரி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
Published on

சிவகிரி:

சிவகிரியில் வத்தலகுண்டு மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் தெடங்கியது. தொடர்ந்து தீர்த்தக் குடம் அழைப்பு, மருந்து சாத்துதலும் நடைபெற்றது. நேற்று அதிகாலை 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடைபெற்றது. காலை 9 மணிக்கு மேல் கோபுர விமான கலசத்துக்கு சிறப்பு அபிஷேகமும், கருமாரியம்மன் மற்றும் பைரவர், சகல பரிவார தேவதைகளுக்கு மகா கும்பாபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com