"மெரினா கடற்கரை, பேனா கடற்கரை என மாறிவிடும்" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

பேனா நினைவு சின்னம் அமைந்தால், மெரினா என்ற அடையாளம் போய் பேனா கடற்கரை என மாறிவிடும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
"மெரினா கடற்கரை, பேனா கடற்கரை என மாறிவிடும்" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
Published on

சென்னை,

சென்னை ஓட்டேரியில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று நீர், மோர் பந்தலை திறந்து வைத்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

"மெரினா கடற்கரை உலக பிரசித்தி பெற்றது. உலகிலே மிகப்பெரிய நீளமான 2-வது கடற்கரை. மெரினா கடற்கரை ஒரு அடையாள சின்னம். கடலில் பேனா சின்னம் அமைப்பதால் சுற்றுசூழல் பாதிக்கப்படும். மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும். இதற்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

பேனா நினைவு சின்னம் அமைந்தால், மெரினா என்ற அடையாளம் போய் பேனா கடற்கரை என மாறிவிடும். தானியங்கி எந்திரம் மூலம் மது வழங்கும் திட்டத்தை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்." என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com