கோபி கூட்டுறவு சங்கத்தில் ரூ.7 லட்சத்துக்கு வாழைத்தார்கள் ஏலம்

கோபி கூட்டுறவு சங்கத்தில் ரூ.7 லட்சத்துக்கு வாழைத்தார்கள் ஏலம்
கோபி கூட்டுறவு சங்கத்தில் ரூ.7 லட்சத்துக்கு வாழைத்தார்கள் ஏலம்
Published on

கடத்தூர்

கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாழைத்தார்கள் ஏலம் நடந்தது. இதற்கு 4 ஆயிரத்து 450 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டன. இதில் கதலி (கிலோ) ரூ.34-க்கும், நேந்திரன் ரூ.33-க்கும் ஏலம் போனது.

பூவன் (தார்) ரூ.370-க்கும், தேன்வாழை ரூ.540-க்கும், பச்சைநாடன் ரூ.360-க்கும், மொந்தன் ரூ.200-க்கும், ரஸ்தாளி ரூ.440-க்கும், ரொபஸ்டா ரூ.310-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.7 லட்சத்து 5 ஆயிரத்துக்கு வாழைத்தார்கள் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் தேங்காய் ஏலம் நடந்தது. இதற்கு 7 ஆயிரத்து 550 தேங்காய்கள் கொண்டு வரப்பட்டன. இதில் தேங்காய் ஒன்று 8 ரூபாய் முதல் 15 ரூபாய் 70 காசு வரை என மொத்தம் 89 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com