கூலித்தொழிலாளி மர்மசாவு

ஓசூரில் கூலித்தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார்.
கூலித்தொழிலாளி மர்மசாவு
Published on

ஓசூர்

ஓசூர் பஸ்தி ஆவலப்பள்ளியை சேர்ந்தவர் சின்ன பில்லப்பா (வயது 48). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இந்த நிலையில் ஓசூர் சிப்காட் ஜூஜூவாடி தனியார் நிறுவனம் அருகே சின்ன பில்லப்பா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com