தமிழ்முறைப்படி திருமணம்... பிலிப்பைன்ஸ் பெண்ணை கரம் பிடித்த சேலம் இளைஞர்

ஒரே இடத்தில் பணிபுரிந்த இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் நாளடைவில் அது காதலாக மலர்ந்தது.
தமிழ்முறைப்படி திருமணம்... பிலிப்பைன்ஸ் பெண்ணை கரம் பிடித்த சேலம் இளைஞர்
Published on

சேலம்,

சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மகன் அரவிந்த் (30 வயது). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதே நிறுவனத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் என்ஜினீயர் ஜெயின் (25 வயது) பணியாற்றி வருகிறார். ஒரே இடத்தில் பணிபுரிந்த இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் நாளடைவில் அது காதலாக மலர்ந்தது.

Also Read
ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் மமதையில் திமுகவினர் வெறியாட்டம் - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
தமிழ்முறைப்படி திருமணம்... பிலிப்பைன்ஸ் பெண்ணை கரம் பிடித்த சேலம் இளைஞர்

4 ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து தங்களது பெற்றோர் சம்மதத்தை பெற்றனர். அதன்படி அரவிந்த், ஜெயின் திருமணம் சேலத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தமிழ் கலாசாரப்படி நடைபெற்றது. அரவிந்த், ஜெயின் கழுத்தில் தாலி கட்டி அவரை கரம் பிடித்தார்.

Also Read
அரசு அதிகாரியை காரை ஏற்றி கொலை செய்த திமுக நிர்வாகியின் மகன் - டிடிவி தினகரன் கண்டனம்
தமிழ்முறைப்படி திருமணம்... பிலிப்பைன்ஸ் பெண்ணை கரம் பிடித்த சேலம் இளைஞர்

இதுகுறித்து அரவிந்த் கூறும் போது, "எனது பெற்றோருக்கு நான் ஒரே மகன். பிலிப்பைன்ஸ் பெண்ணை காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்து கொள்வதாகவும் தெரிவித்தபோது அவர்கள் மறுப்பு தெரிவிக்கவில்லை” என்றார். தமிழ் கலாசாரப்படி தாலி கட்டி திருமணம் செய்தது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று மணப்பெண் ஜெயின் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com