ஒரு வாரத்தில் திருமணம்.. அழைப்பிதழ் கொடுக்க சென்ற புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்

வருகிற 28-ந்தேதி திருமணம் நடக்க இருந்தநிலையில், திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கு அவர் வழங்கி வந்தார்.
மதுரை,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் கருப்பையா. இவருடைய மகன் பிரசன்ன வெங்கடேஷ் (வயது 26). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு வருகிற 28-ந்தேதி திருமணம் நடக்க இருந்தது. திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கு வழங்கி வந்தார்.
நேற்று முன்தினம் இரவு உசிலம்பட்டி பகுதியில் திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டு, வீடு திரும்பியபோது உசிலம்பட்டியில் பேரையூர் ரோட்டில் சென்றபோது எதிரே வந்த வேன் ஒன்று, எதிர்பாராதவிதமாக அவரது பைக் மீது மோதியது. இதில் பிரசன்ன வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து உசிலம்பட்டி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவரது உடலை பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சில தினங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் நடந்த இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






