17 வயது சிறுமிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு

போக்சோ மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
17 வயது சிறுமிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு
Published on: 

சேலம்,

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள கோனேரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் நடராஜ். இவருடைய மகன் அஜித் (வயது 18). இவர் தம்மம்பட்டியில் ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். தம்மம்பட்டி அருகே உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்த நாகியம்பட்டி கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை அஜித் கடந்த அக்டோபர் மாதம் 2-ந் தேதி காதல் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதில் அந்த சிறுமி தற்போது கர்ப்பமானார்.

இதனிடையே சிறுமி சேலம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு சென்ற போது அவரது சான்றிதழ்களை டாக்டர்கள் சரிபார்த்தனர். அப்போதுதான் அவர் 17 வயது சிறுமி என தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவ அதிகாரிகள் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அஜித் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X