கணவர் வெளியூரில் வேலை: 17 வயது சிறுவனை மயக்கி பன்றி பண்ணையில் திருமணமான இளம்பெண் உல்லாசம்


கணவர் வெளியூரில் வேலை: 17 வயது சிறுவனை மயக்கி பன்றி பண்ணையில் திருமணமான இளம்பெண் உல்லாசம்
x
தினத்தந்தி 20 Jun 2025 4:18 PM IST (Updated: 20 Jun 2025 4:57 PM IST)
t-max-icont-min-icon

சிறுவனை தன்வசப்படுத்திய காளீஸ்வரி, பன்றி பண்ணையில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுவனுடன் உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது.

களக்காடு,

சமூக வளைதளங்கள் சிலரது திறமையை வெளிப்படுத்தும் தளமாக விளங்குகிறது . அதேநேரம் சமூக வலைதளத்தில் இளைஞர்களும் இளம்பெண்களும் மூழ்கி கிடப்பதால் அவர்களின் வாழ்க்கை சீரழிவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.அந்த வகையில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவனை ஆசைவார்த்தைகளை கூறி மயக்கி, திருமணமான 8வயது மகனை வைத்திருக்கும் இளம்பெண் ஒருவர் அவருடன் குடும்பம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்ஸ்டா மோகத்தினால் தனது குடும்பத்தை நிர்கதியாக்கிவிட்டு போலீசாரால் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்த பெண் குறித்த விபரம் வருமாறு:-நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள வாகைகுளத்தை சேர்ந்தவர் காளீஸ்வரி (வயது 32) இவருக்கு வாலிபர் ஒருவருடன் திருமணமாகி 8 வயதில் ஒரு மகன் உள்ளார்.அவரது கணவர் வெளியூரில் தங்கி இருந்து வேலை பார்த்து வரும் நிலையில், காளீஸ்வரி தனது மகனுடன் சொந்த ஊரில் வசித்து வருகிறார். இந்தநிலையில் இவருக்கு களக்காடு அருகே உள்ள தேவநல்லூரில் உள்ள பன்றி பண்ணையில் வேலை பார்த்துவரும் 17 வயது சிறுவனுடன் இன்ஸாடாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த சிறுவன் பள்ளி படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்பை தொடராமல் வேலைக்கு சென்றுவந்த நிலையில், வீட்டில் வேலைகளை முடித்துவிட்டு ஓய்வில் இருக்கும் நேரங்களில் காளீஸ்வரியுடன் மணிக்கணக்கில் பேசி வந்துள்ளார்.

இன்ஸ்டாவில் சிறுவன் ஆபாச பதிவுகளை போடுவதும் அதனை காளீஸ்வரி ரசித்து கிண்டல் செய்வதுமாக இவர்களது தொடர்பு இருந்து வந்துள்ளது. இவர்களது பழக்கம் ஓராண்டாக தொடர்ந்த நிலையில், காளீஸ்வரி அந்த சிறுவனை தன்வசப்படுத்த விரும்பி உள்ளார். கணவர் வெளியூரில் வேலை பார்த்து வருவதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட காளீஸ்வரி பகலிலும், இரவிலும் சிறுவனுடன் இன்ஸ்டாவில் இனிக்க இனிக்க பேசி வந்துள்ளார். சிறுவனும் காளீஸ்வரியின் பேச்சில் மயங்கி உள்ளார். சிறுவனை தன்வசப்படுத்திய காளீஸ்வரி, பன்றி பண்ணையில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுவனுடன் உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. காளீஸ்வரி விரும்பும் போதெல்லாம் பன்றி பண்ணைக்கு சிறுவனை அழைத்து உல்லாசமாக இருப்பாராம்.

கடந்த 2 மாதங்களுக்கு முன் காளீஸ்வரி அந்த சிறுவனை வலுக்கட்டாயமாக அழைத்து சென்று களக்காடு கோவில்பத்தில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளார். தகவல் அறிந்ததும் காளீஸ்வரியின் கணவர் அவருக்கு போன் செய்துள்ளார். எதிர்முனையில் பேசிய சிறுவன், 2 பேரும் சேர்ந்து வாழப்போவதாகவும் தொந்தரவு செய்தால் உங்கள் மகனை கொன்றுவிடுவதாகவும் கூறியுள்ளார்.

இதனை அறிந்த சிறுவனின் தாயார் நாங்குநேரி அனைத்து மகளிர் போலிசில் புகார் செய்தார். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி விசாரணை நடத்தி காலீஸ்வரி மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். மேலும் அவரை நேற்று தேடி கண்டுபிடித்து கைது செய்தார். அவரது குழந்தையை காளீஸ்வரியின் கணவரிடம் போலீசார் ஒப்படைத்தனர். மேலும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கொக்கிரகுளம் மகளிர் சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவனுடன் 32 வயது திருமணமான இளம்பெண் குடித்தனம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story