ஓபிஎஸ் அணியில் இருந்த மருது அழகுராஜ் திமுகவில் இணைந்தார்

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார் மருது அழகுராஜ்.
சென்னை,
அதிமுகவில் பயணித்து வந்த மருது அழகுராஜ், எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர் செல்வம் இடையே பிளவு ஏற்பட்ட போது, ஓ பன்னீர் செல்வம் அணியில் இணைந்து பயணித்தார். ஆனால், ஓபிஎஸ் அணியிலும் அதிருப்தியில் இருந்து வந்த அவர் தனது எக்ஸ் தளத்தில் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தும், தவெக தலைவர் விஜய் ஆதரவு நிலைப்பாட்டுடன் பதிவுகளை போட்டு வந்தார்.
இந்த நிலையில், இன்று திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார் மருது அழகுராஜ். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக சார்பாக வேட்பாளராக போட்டியிட்டார் என்பது நினைவு கொள்ளத்தக்கது.
Related Tags :
Next Story






