மருதுபாண்டியர் 221-வது குருபூஜை: 7 தாலுகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை...!

மருதுபாண்டியரின் 221 வது குருபூஜையை முன்னிட்டு, நாளை சிவகங்கை தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மருதுபாண்டியர் 221-வது குருபூஜை: 7 தாலுகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை...!
Published on

சிவகங்கை,

மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் முழுவதும் வருகிற 31-ந் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

நாளை (24-ந் தேதி) மருது சகோதரர்களை ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்ட நினைவு தினம் திருப்பத்தூரில் அரசு சார்பிலும், 27-ந் தேதி அவர்களின் சமாதி அமைந்துள்ள காளையார்கோவிலில் சமுதாய மக்கள் சார்பில் குருபூஜை விழாவாகவும் அனுசரிக்கப்படவுள்ளது. இந்நிகழ்விற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய மக்கள் ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்த உள்ளனர்.

இந்த நிலையில், மருதுபாண்டியர்களின் 221வது குருபூஜையை முன்னிட்டு, நாளை (செவ்வாய்க்கிழமை) சிவகங்கை, தேவகோட்டை, இளையான்குடி, மானாமதுரை, காளையார் கோவில், திருப்புவனம், திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com