மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டம்

சேதுபாவாசத்திரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டம் நடந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டம்
Published on

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு கூட்டம் ரெட்டவயல் விழா அரங்கில் நடைபெற்றது. ஒன்றியக்குழு உறுப்பினர் இளங்கோவன் தலைமை தாங்கினார். இதில் மாவட்டச்செயற்குழு உறுப்பினர் மனோகரன் பேசினார். கூட்டத்தில், 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு நிலுவை இன்றி ஊதியத்தை வழங்க வேண்டும். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை வரவேற்கிறோம். இதில் விடுபட்ட மற்றும் தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் உரிமைத்தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

X

Daily Thanthi
www.dailythanthi.com