மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்

குடியாத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
Published on

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு பிச்சாண்டி, அம்சா ஆகியோர் தலைமை தாங்கினார்கள். கட்சி நிர்வாகிகள் தனலட்சுமி, விஜயகுமாரி, லலிதா, விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு கே.ஜே.சீனிவாசன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

ஆர்ப்பாட்டத்தில் ரேஷன் கடையில் தரமான அரிசி வழங்க வேண்டும், தெருகளுக்கு சாலை வசதி, கழிவுநீர் வசதி செய்ய வேண்டும், கிராம பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தை 200 நாள் வேலையாகவும், கூலி ரூ.600 வழங்க வேண்டும், மேல் செட்டிக்குப்பம், சின்ன செட்டிகுப்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு அரசு வீட்டு மனை வழங்கி பல வருடம் ஆகியும் அரசு பதிவேட்டில் சேர்க்காமல் உள்ளதை உடனே சேர்க்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் குணசேகரன், தாலுகா செயலாளர்கள் சி.சரவணன், எஸ்.சிலம்பரசன், மாவட்ட குழு கே.சாமிநாதன், தாலுகா குழுவை சார்ந்த பி.வசந்தி, சி.எம்.நடராஜன், கே.ராமமூர்த்தி, ஐ.கார்த்திகேயன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com