மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சிவகிரி அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

சிவகிரி:

சிவகிரி அருகே தேவிபட்டணத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வெள்ளை பாண்டியன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.பி.ரவி, மாவட்டக்குழு உறுப்பினர் சக்திவேல், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராஜ், மாதர் சங்க தலைவி பேச்சியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com