மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அரசு ஆஸ்பத்திரியில் போதிய டாக்டர்களை நியமிக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

பந்தலூர்

பந்தலூர் அரசு ஆஸ்பத்திரியில் போதிய டாக்டர்களை நியமனம் செய்ய வேண்டும், புதிய எக்ஸ்ரே உள்ளிட்ட உபகரணங்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பந்தலூர் பஜாரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ரமேஷ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பந்தலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆஸ்பத்திரியில் போதிய டாக்டர்கள், ஊழியர்கள் இல்லை. இதனால் நோயாளிகள், கர்ப்பிணிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் அங்கு எக்ஸ்ரே, அவசர சிகிச்சை பிரிவு போன்ற வசதிகள் இல்லை. எனவே, போதிய டாக்டர்களை நியமிக்க வேண்டும் என கோஷம் எழுப்பி வலியுறுத்தினர். இதுகுறித்து கட்சியினர் கூறும்போது, பந்தலூர் அரசு ஆஸ்பத்திரி தாலுகாவின் தலைமை ஆஸ்பத்திரியாக உள்ளது. இங்கு தினமும் பந்தலூர் அட்டி காலனி, மேங்கோரேஞ்ச், உப்பட்டி, பொன்னானி, குந்தலாடி, பிதிர்காடு, நெலாக்கோட்டை, கரியசோலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆகவே, எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்ட உபகரணங்களை வழங்க வேண்டும் என்றனர். இதில் சம்சுதின், பரதீஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com