குழந்தை திருமணத்தை கண்காணிக்க குழு அமைக்க கோரிமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்சிதம்பரத்தில் நாளை நடக்கிறது

குழந்தை திருமணத்தை கண்காணிக்க குழு அமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சிதம்பரத்தில் நாளை ஆாப்பாட்டத்தில் ஈடுபட்டனா.
குழந்தை திருமணத்தை கண்காணிக்க குழு அமைக்க கோரிமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்சிதம்பரத்தில் நாளை நடக்கிறது
Published on

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் டெல்டா பகுதி இடைக்குழு செயலாளர்கள் கூட்டம் கடலூரில் நடந்தது. கூட்டத்துக்கு மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதவன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தேன்மொழி, மாவட்ட குழு உறுப்பினர்கள் வாஞ்சிநாதன், பிரகாஷ், முத்துக்குமரன், இடைக்குழு செயலாளர்கள் ராஜா, ஆழ்வார், ஸ்டாலின், மனோகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், சிதம்பரத்தில் நடக்கும் குழந்தை திருமணங்களை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும். குழந்தை திருமண சட்டத்தை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசே ஏற்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரத்தில் நாளை (சனிக்கிழமை) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com