போக்சோவில், கொத்தனார் கைது

10-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்ததாக கொத்தனாரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
போக்சோவில், கொத்தனார் கைது
Published on

மன்னார்குடி:

மன்னார்குடி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராகேஷ் (வயது 22).கொத்தனார். இவருக்கு திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் இவர் 10-ம் வகுப்பு மாணவி ஒருவரை திருமண செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறி பலாத்காரம் செய்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் தாயார் மன்னார்குடி அனைத்து மகளிர்போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னை அபிராமி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராகேசை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com