விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை

இரணியல் அருகே விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை
விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை
Published on

திங்கள்சந்தை,

இரணியல் அருகே உள்ள குருந்தன்கோடு ஆசாரிவிளை பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 65). கொத்தனாரான இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் செல்வகுமார் விஷம் குடித்து வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வகுமார் பரிதாபமாக இறந்தார்.

மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com