விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை

விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை
Published on

அழகியபாண்டியபுரம்,

பூதப்பாண்டி அருகே உள்ள தடிக்காரன்கோணம் புது கிராமம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (வயது 31). கொத்தனாரான இவருக்கு மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் பிரவீனுக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மாலையில் பிரவீன் வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com