விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை

தக்கலை அருகே விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை
விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை
Published on

தக்கலை, 

தக்கலை அருகே உள்ள கொற்றிக்கோடு, சுனைபாறையை சேர்ந்தவர் தேவசகாயம் (வயது36), கொத்தனார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். தேவசகாயத்துக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு எனத்தெரிகிறது. மேலும், கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த தேவசகாயம் சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்தியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கொற்றிக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

--------

X

Daily Thanthi
www.dailythanthi.com