விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை

திருப்பதிசாரம் அருகே 2 முறை தற்கொலைக்கு முயன்ற கொத்தனார், 3-வது முறையாக விஷம் குடித்து உயிரிழந்தார்.
விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை
Published on

ஆரல்வாய்மொழி:

திருப்பதிசாரம் அருகே 2 முறை தற்கொலைக்கு முயன்ற கொத்தனார், 3-வது முறையாக விஷம் குடித்து உயிரிழந்தார்.

கொத்தனார்

திருப்பதிசாரம் ஊராட்சிக்குட்பட்ட தெற்கு திருப்பதிசாரத்தை சேர்ந்தவர் சாது (வயது 56). கொத்தனாரான இவருடைய மனைவி ஆன்டிஸ் லைலா. இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர்.

சாது தினமும் மதுகுடித்து விட்டு வீட்டில் தகராறு செய்துள்ளார். இதேபோல கடந்த 23-ந் தேதியும் வாக்குவாதம் செய்த அவர் வீட்டில் இருந்து வெளியே சென்றார்.

அதன் பிறகு வெகுநேரம் கழித்து வீட்டுக்கு வந்த அவர் மிகவும் சோர்வாக இருந்தார். இதனை கவனித்த குடும்பத்தினர் அவரிடம் கேட்ட போது விஷம் குடித்ததாக கூறியுள்ளார்.

தற்கொலை

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று காலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். சாது ஏற்கனவே 2 முறை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் இதுகுறித்து ஆரல்வாய்மொழிபோலிசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com